/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : செப் 04, 2025 04:28 AM

காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாடில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகவும்,கல்வி நகரமாக விளங்கும் காரைக்குடி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடின்றி காட்சி பொருளாக கிடக்கிறது. குடிநீர் கிடைக்காமல், பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இந்நிலையில், முந்தைய கலெக்டர் ஆஷா அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயன்பாடின்றி கிடக்கும் சுத்திகரிப்பு இயந்திரங்களை பார்வையிட்டார். சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரங்களை சரி செய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.