/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உயர்நிலைப் பள்ளி அருகே பாதுகாப்பற்ற மின்கம்பம் உயர்நிலைப் பள்ளி அருகே பாதுகாப்பற்ற மின்கம்பம்
உயர்நிலைப் பள்ளி அருகே பாதுகாப்பற்ற மின்கம்பம்
உயர்நிலைப் பள்ளி அருகே பாதுகாப்பற்ற மின்கம்பம்
உயர்நிலைப் பள்ளி அருகே பாதுகாப்பற்ற மின்கம்பம்
ADDED : மார் 24, 2025 05:45 AM

தேவகோட்டை: புளியாலில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி ரோட்டின் வழியாக குடியிருப்புக்களுக்கும், அருகில் உள்ள இலுப்பக்குடி நெய்வயல் உள்ளிட்ட கிராமங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த ரோட்டின் வழியாக மின்கம்பம் செல்கிறது. பள்ளி அருகே உள்ள மின்கம்பம், மின் மாற்றி அடர்ந்த முட்புதரில் இருக்கின்றன.
சில நேரங்களில் காற்றில் முட்செடிகள் மின் கம்பிகளில் உரசி தீப்பொறி ஏற்படுகிறது. அந்த வழியாக செல்வோர் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. மழை காலத்தில் இதே நிலை அதிகரிக்கிறது.
இதன் காரணமாக அடிக்கடி மின்சார தடையும் ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன.
மின்சாரம் தொடர்பாக ஏதேனும் பழுது ஏற்பட்டால் முட்புதருக்குள் சென்று மின்சார பணியாளர்களால் பணி செய்ய முடியவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக புளியால் அரசு உயர்நிலை பகுதியை பார்வையிட்டு மின்கம்பிகளை, மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும்.