/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
ADDED : பிப் 25, 2024 06:17 AM

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார்.
மல்லர் கம்பம் வீர விளையாட்டு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் பரிசுகளை வழங்கினார். மாங்குடி எம்எல்ஏ., மத்திய பல்கலை உடற்கல்வி துறை தலைவர் மணியழகு, பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை உடற்கல்வி இயக்குனர் முத்து கண்ணன் உடற்கல்வி ஆசிரியர்கள் ரத்தினராஜ், சங்கர நாராயணன் செய்திருந்தனர். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.