/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அனுமதி பெறாத சோலார் மின் வேலி; கிராமமக்கள் தவிப்பு அனுமதி பெறாத சோலார் மின் வேலி; கிராமமக்கள் தவிப்பு
அனுமதி பெறாத சோலார் மின் வேலி; கிராமமக்கள் தவிப்பு
அனுமதி பெறாத சோலார் மின் வேலி; கிராமமக்கள் தவிப்பு
அனுமதி பெறாத சோலார் மின் வேலி; கிராமமக்கள் தவிப்பு
ADDED : செப் 09, 2025 09:39 PM
பழையனுார்; பழையனுார் அருகே பிரான்குளத்தில் அனுமதியின்றி விவசாய நிலத்தைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைத்திருப்பதால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பழையனூர், ஓடாத்துார், பிரான்குளம் உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும், மழை பெய்தால் மட்டுமே நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படும். பிரான்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த மூன்று மாதமாக பட்டுப்புழு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பட்டுப்புழு வளர்ப்பிற்காக மல்பெரி செடிகளை வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகள், பன்றிகள் விவசாயத்தை சேதப்படுத்துவதால் விவசாய நிலங்களைச் சுற்றிலும் சோலார் மின் வேலி அமைத்துள்ளார்.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை வேலியில் விட்டு விட்டு மின்சாரம் பாயும் வகையில் வடிவமைத்துள்ளார்.
மின்வேலியை தவறுதலாக தொடும் ஆடு, மாடு, கிராமமக்கள் உள்ளிட்டோருக்கு சில நிமிடங்கள் சுயநினைவு இருப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: விலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க சோலார் மின்வேலி உரிய அனுமதி பெற்று தான் அமைக்க வேண்டும், அனுமதி பெறாமல் அமைக்க கூடாது, மின் வேலியில் எத்தனை வோல்ட் மின்சாரம், தொடாதீர்கள் என எச்சரிக்கை அமைப்பு பொருத்தப்பட வேண்டும், என்றனர்.