ADDED : செப் 09, 2025 09:38 PM
சிவகங்கை; நாளை பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் வெளி மாவட்ட, சிவகங்கை மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 200 பேர் 340 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் 6 ஏ.டி.எஸ்.பி., 20 டி.எஸ்.பி., 70 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியை கண்காணிக்கின்றனர்.