/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டூவீலர் - பஸ் மோதல் சிறுமி உட்பட 2 பேர் காயம்டூவீலர் - பஸ் மோதல் சிறுமி உட்பட 2 பேர் காயம்
டூவீலர் - பஸ் மோதல் சிறுமி உட்பட 2 பேர் காயம்
டூவீலர் - பஸ் மோதல் சிறுமி உட்பட 2 பேர் காயம்
டூவீலர் - பஸ் மோதல் சிறுமி உட்பட 2 பேர் காயம்
ADDED : ஜன 05, 2024 04:57 AM
திருப்புத்துார் ; திருப்புத்துார் அருகே மதுரை ரோட்டில் கோட்டையிருப்பு அருகே நேற்று டூ வீலர்-ஆம்னி பஸ் மோதலில் டூ வீலரில் வந்த சிறுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
திருப்புத்துார் அருகே எஸ். செவல்பட்டி புதுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன். இவர் அவருடைய அண்ணன் மகள் ஆர்த்தி6, என்பவரை டூ வீலரில் வைத்து நேற்று காலை 9:00 மணி அளவில் கோட்டையிருப்பிற்கு சென்றார்.
கோட்டையிருப்பு வேகத்தடுப்பு அருகே செல்கையில் திருப்புத்துாரிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஆம்னி பஸ் டூ வீலர் மீது மோதியது. அதில் சிறுமி ஆர்த்தி துாக்கி வீசப்பட்டதால் தலையில் படுகாயமடைந்தார்.
டூ வீலர் ஓட்டி வந்த பார்த்திபனும் காயம் அடைந்தார். இருவரும் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.