/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வழிப்பறி செய்து தப்பிய இருவரின் கால் முறிவு வழிப்பறி செய்து தப்பிய இருவரின் கால் முறிவு
வழிப்பறி செய்து தப்பிய இருவரின் கால் முறிவு
வழிப்பறி செய்து தப்பிய இருவரின் கால் முறிவு
வழிப்பறி செய்து தப்பிய இருவரின் கால் முறிவு
ADDED : மார் 24, 2025 05:41 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் விரட்டியபோது, கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோடு சத்தியமூர்த்தி 48. இவர் கல்குளம் விலக்கு அருகே சென்றபோது, வேலாங்குளத்தை சேர்ந்த கருப்புச்சாமி மகன் சூர்யா 27, கீழக்குளம் சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார் 23, ஆகிய இருவரும் அவரிடம் வாளை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் வழிப்பறி செய்தனர். சிவகங்கை போலீசார் அவர்கள் இருவரும் இந்திராநகரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் தப்பி ஓடியபோது, இருவரும் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது.
அவர்கள் இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.