/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் கோயில் மாடுகளால் விபத்து அச்சம் திருப்புவனத்தில் கோயில் மாடுகளால் விபத்து அச்சம்
திருப்புவனத்தில் கோயில் மாடுகளால் விபத்து அச்சம்
திருப்புவனத்தில் கோயில் மாடுகளால் விபத்து அச்சம்
திருப்புவனத்தில் கோயில் மாடுகளால் விபத்து அச்சம்
ADDED : மார் 24, 2025 05:41 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் பங்குனி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் அக்னிசட்டி எடுத்து வீதியுலா வருபவர்களுடன் மேளம், டரம்செட் அடித்து வருவதால் கோயில் மாடுகள் மிரண்டு ஓடி தினசரி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வலம் வருகின்றன. தினசரி மார்கெட், வாரச்சந்தையில் மீதமாகும் காய்கறிகள், குப்பை மேடுகளில் மேய்ந்து கொண்டு நகரில் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.
மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினசரி ஏராளமான பக்தர்கள் நாள் முழுவதும் அக்னிசட்டி எடுத்து வீதியுலா வந்து அம்மன் கோயிலில் நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர்.
வீதியுலா வரும் போது டரம்செட், கெட்டி மேளம் உள்ளிட்டவைகள் அடித்து கொண்டே வருவார்கள். இந்த சப்தத்திற்கு கோயில் மாடுகள் மிரண்டு தாறுமாறாக ரோட்டில் ஒடுகின்றன.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். தினசரி பலரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் மாடுகளை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.