/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டூவீலர் - அரசு பஸ் மோதல் இருவர் பலி டூவீலர் - அரசு பஸ் மோதல் இருவர் பலி
டூவீலர் - அரசு பஸ் மோதல் இருவர் பலி
டூவீலர் - அரசு பஸ் மோதல் இருவர் பலி
டூவீலர் - அரசு பஸ் மோதல் இருவர் பலி
ADDED : ஜூன் 22, 2025 09:16 PM

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே டூவீலர் மீது, அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி ராமு மகன் கிேஷார் 17, பாண்டி மகன் பால்பாண்டி 21. முனியராஜ் மகன் கரண்குமார் 14. இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் டூவீலரில் காரைக்குடி சென்றுவிட்டு தேவகோட்டை பைபாஸ்ரோடு வழியாக சென்றனர்.
இரவு 9:00 மணிக்கு சிவாந்தன்கோட்டை என்ற இடத்தில் எதிரே தேவகோட்டைக்கு சென்ற அரசு பஸ் , டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த மூன்று பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கிேஷார் உயிரிழந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பால்பாண்டியும் பலியானார். கரண்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் டிரைவர் வசந்தகுமாரிடம் தேவகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.