ADDED : செப் 23, 2025 04:11 AM
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பையால் பொதுமக்கள் சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக் கின்றனர்.
இப்பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். இங்கு மட்டுமின்றி தாலுகா, நீதிமன்றம், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் குப்பை கொட்டி யுள்ளதால், அலுவலகங் களுக்கு செல்லமுடியாமல் மக்கள், அலுவலர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டுவதற்கு நகருக்கு வெளியே இடம் தேர்வு செய்ய வேண்டும்.