/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஹெல்மெட் அணிந்து கடையை தாக்கிய கும்பல் ஹெல்மெட் அணிந்து கடையை தாக்கிய கும்பல்
ஹெல்மெட் அணிந்து கடையை தாக்கிய கும்பல்
ஹெல்மெட் அணிந்து கடையை தாக்கிய கும்பல்
ஹெல்மெட் அணிந்து கடையை தாக்கிய கும்பல்
ADDED : செப் 23, 2025 04:11 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து வீடு , கடையை தாக்கிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பாண்டி, வீட்டையொட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி இரவு ஹெல்மெட் அணிந்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் பாண்டியின் வீடு, கடையை தாக்கியதுடன் தடுக்க வந்த அவரது மகள் ஆதீஸ்வரி 21, உறவினர் சிறுவனை தாக்கிவிட்டு தப்பியது.
சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. தங்களுடைய நிலத்தை மோசடி செய்த கும்பல் வீடு புகுந்து தாக்கியதாக ஆதீஸ்வரி புகார் செய்தார்.
விசாரணையில் ஆதீஸ்வரியின் அண்ணன் ஆதிராஜேஸ்வரனுக்கும் மடப்புரத்தைச் சேர்ந்த கவுதம் 25, என்பவருக்கும் பணம், கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது. பணத்தை திரும்ப தராததால் கவுதம் தனது கூட்டாளிகளுடன் வந்து வீடு, கடையை அடித்து நொறுக்கியுள்ளார். போலீசார் கவுதமை ரிமாண்டிற்கு அனுப்பினர்.