ADDED : மே 23, 2025 12:21 AM
கீழடி: கொந்தகையில் நெல் அறுவடைக்கு பின் பயிறு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வேளாண் அலுவலர் கலைவாணி தலைமையில் நடந்தது.
ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் குணசேகரன் நெல் அறுவடை செய்த வயல்களில் பயிறு வகைகள் சாகுபடி செய்வது குறித்து விளக்கமளித்தார். உதவி வேளாண் அலுவலர் முத்துபிரியா வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர். முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.