/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டாஸ்மாக் கடையில் பணம் இல்லாததால் போதையில் கடைக்கு தீ வைத்தவர் கைது டாஸ்மாக் கடையில் பணம் இல்லாததால் போதையில் கடைக்கு தீ வைத்தவர் கைது
டாஸ்மாக் கடையில் பணம் இல்லாததால் போதையில் கடைக்கு தீ வைத்தவர் கைது
டாஸ்மாக் கடையில் பணம் இல்லாததால் போதையில் கடைக்கு தீ வைத்தவர் கைது
டாஸ்மாக் கடையில் பணம் இல்லாததால் போதையில் கடைக்கு தீ வைத்தவர் கைது
ADDED : மே 23, 2025 02:03 AM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டாஸ்மாக் கடையில் பணம் இல்லாத விரக்தியில் போதையில் கடையை தீ வைத்து எரித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் அரசகுழி மயானம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விற்பனையை முடித்து விட்டு விற்பனை செய்த பணத்தை லாக்கரில் மறைத்து வைத்து விட்டு கடையின் ஷட்டரை மூடிவிட்டு விற்பனையாளர், மேற்பார்வையாளர் கணேசன் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை 12:30 மணிக்கு கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த திருடன் விற்பனையான பணத்தை தேடி பார்த்தான். அவனுக்கு ரூ.2500 மட்டுமே கிடைத்தது. அதனால் விரக்தி அடைந்த திருடன் மது குடித்துவிட்டு போதையில் கடைக்கு தீ வைத்துவிட்டு சென்றான். மானாமதுரை போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் தீயை அணைத்தனர். எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடைக்கு தீ வைத்த இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்த கவுதம் 22, என்பவரை கைது செய்தனர். கவுதம் மீது இளையான்குடி, சாலைக்கிராமம், பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.