/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழா கடும் வெயிலில் தவித்த பக்தர்கள்திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழா கடும் வெயிலில் தவித்த பக்தர்கள்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழா கடும் வெயிலில் தவித்த பக்தர்கள்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழா கடும் வெயிலில் தவித்த பக்தர்கள்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழா கடும் வெயிலில் தவித்த பக்தர்கள்
ADDED : பிப் 24, 2024 09:29 PM

திருக்கோஷ்டியூர்:சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவில் மாசித் தெப்ப திருவிழாவை முன்னிட்டு தெப்பம் நடந்தது. இன்று காலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி, மாலை சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச்சேர்ந்த இக்கோவிலில் தெப்ப திருவிழா பிப்., 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடந்தது.
நேற்று முன்தினம் பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோவிலிலிருந்து புறப்பட்டு, தெப்பக்குளக்கரை மண்டபம் எழுந்தருளினர்.
காலை 10:10 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது.
11:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். மதியம் 12:15 மணிக்கு தெப்ப உலா துவங்கியது. குளத்தை சுற்றி பெண்கள் குடும்பம்,குடும்பமாக வந்து விளக்கேற்றினர்.
பின்னர் சுவாமி தெப்ப மண்டபத்திற்கு மீண்டும் எழுந்தருளினார்.
இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். மாலையில் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.
நீண்ட வரிசையில் வாகனங்கள்: திருக்கோஷ்டியூர் தெப்ப விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை முதல் வாகனங்களில் வந்த மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற திட்டமிடல் இல்லை.
வாகனங்கள் காட்டாம்பூரிலிருந்து தி.வைரவன்பட்டி வரை நெரிசலில் சிக்கின. போலீசார் தவித்தனர். தெப்பமும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் துவங்காததால் தெப்பக்குளத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
சில கி.மீ. துாரம் பக்தர்களை நடக்க வைத்தனர். கடும் வெயிலில் போதிய குடிநீர் வசதி இன்றி பக்தர்கள் தவித்தனர்.