/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கோயில் உண்டியல் திருட்டு தொடர்கிறது போதிய போலீஸ் இல்லாததால் திணறல்கோயில் உண்டியல் திருட்டு தொடர்கிறது போதிய போலீஸ் இல்லாததால் திணறல்
கோயில் உண்டியல் திருட்டு தொடர்கிறது போதிய போலீஸ் இல்லாததால் திணறல்
கோயில் உண்டியல் திருட்டு தொடர்கிறது போதிய போலீஸ் இல்லாததால் திணறல்
கோயில் உண்டியல் திருட்டு தொடர்கிறது போதிய போலீஸ் இல்லாததால் திணறல்
ADDED : பிப் 24, 2024 04:49 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் தொடரும் திருட்டுக்களால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.போலீஸ் பற்றாக்குறையால் புலம்புகின்றனர்.
தேவகோட்டை நகர் மற்றும் அருகில் உள்ள கிராம கோயில்களில் உண்டியல் உடைப்பு அடிக்கடி அரங்கேறி வருகிறது.சில சம்பவங்களில் திருடர்கள் சிக்கினர்.சில திருட்டுகளில் இன்னும் சிக்கவில்லை.
குறிப்பாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி,உண்டியல் பணம் திருடு போன கொத்தங்குடி இடையன்காளியம்மன் கோயிலில் ஐந்து ஆண்டாகியும் கொள்ளையர்கள் இன்னும் சிக்கவில்லை.
கடந்த வாரம் தேவகோட்டை அருகே கோயில்களில் உண்டியல் உடைப்பு நடந்தது.நேற்று முன்தினம் நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது.
இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணியளவில் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே தேவகோட்டை அன்னை அபிராமி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் திருடி சென்று விட்டார்.
அப்பகுதியில் உள்ளவர்கள் அந்த வாலிபர் சுவாமி கும்பிடுவதாக நினைத்து இருந்த நிலையில் உண்டியல் சத்தம் கேட்டவுடன் மக்கள் சத்தம் போடவே உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இக்கோயில் அருகிலேயே பள்ளி எதிர்புறம் இருக்கும் மருத்துவமனை ஊழியர் காலனியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலையும் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
தேவகோட்டையில் போதிய போலீசார் இல்லாததால் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து திருட்டுக்கள் நடந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.