/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இலங்கை அதிபரின் கருத்துக்கு சர்வஜனா சபை கட்சி எதிர்ப்பு இலங்கை அதிபரின் கருத்துக்கு சர்வஜனா சபை கட்சி எதிர்ப்பு
இலங்கை அதிபரின் கருத்துக்கு சர்வஜனா சபை கட்சி எதிர்ப்பு
இலங்கை அதிபரின் கருத்துக்கு சர்வஜனா சபை கட்சி எதிர்ப்பு
இலங்கை அதிபரின் கருத்துக்கு சர்வஜனா சபை கட்சி எதிர்ப்பு
ADDED : செப் 03, 2025 12:56 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த இலங்கை சர்வஜனா சபை கட்சி மத்திய கொழும்பின் அமைப்பாளர் இப்ராஹிம் குரேஷ், பறிமுதல் படகுகள் திரும்ப வழங்கப்படாது என்ற இலங்கை அதிபர் அனுர குமராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மடப்புரம் கோயிலில் நடந்த நண்பரின் இல்ல விழாவிற்கு இலங்கையில் இருந்து வந்த இப்ராஹிம் குரேஷ் அம்மனை தரிசனம் செய்தார். எல்லை தாண்டும் மீனவர்களின் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இனி திரும்ப வழங்கப்படாது என இலங்கை அதிபர் அனுர குமராவின் அறிவிப்பிற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தாய்நாடு என்றால் இந்தியா நாங்கள் பிறந்த தேசம். மீனவர்களின் படகுகளை திரும்ப வழங்க முடியாது என அதிபர் கூறுவது தவறு. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லை உண்டு. அதனை பாதுகாப்பது அந்தந்த நாட்டு ராணுவத்தின் கடமை. எனவே எல்லை தாண்டும் போது ராணுவம் நடவடிக்கை எடுப்பது கட்டாயம். உரிய விசாரணைக்கு பின் மீனவர்களின் படகுகள் திரும்ப வழங்கப்பட வேண்டும். இலங்கையில் சீனா அதிகளவில் முதலீடு செய்துள்ளது. மின்சார கார் வரி ஏய்ப்பு செய்திருக்க கூடாது. முறையாக வரி செலுத்த சீனா முன் வர வேண்டும்.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கியது அவரது சொந்த விஷயம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும் என்றார்.