/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆதார் கார்டில் இனி தந்தை கணவர் பெயர் இடம் பெறாது ஆதார் கார்டில் இனி தந்தை கணவர் பெயர் இடம் பெறாது
ஆதார் கார்டில் இனி தந்தை கணவர் பெயர் இடம் பெறாது
ஆதார் கார்டில் இனி தந்தை கணவர் பெயர் இடம் பெறாது
ஆதார் கார்டில் இனி தந்தை கணவர் பெயர் இடம் பெறாது
ADDED : செப் 03, 2025 01:02 AM
சிவகங்கை:இனி வரும் காலங்களில் ஆதார் அட்டையில் தந்தை, கணவர் பெயர், பிறந்த தேதி, மாதம் இடம் பெறாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்பதால் அன்றாடம் ஆதார் மையங்களில் இனிஷியல் மாற்றம், முகவரி மாற்றம், புதிதாக பெயர்களை சேர்த்தல் போன்ற பணிகளுக்காக கலெக்டர், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆதார் மையங்களுக்கான சர்வர் கடந்த மாதம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஆதார் கார்டில் மாற்றங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்கு மேலாகியும், ஆதார் கார்டு வரவில்லை.
ஆதார் மைய மாவட்ட பொறுப்பாளர்கள் கூறியதாவது, ஆதார் கார்டுக்கான சர்வர் மாற்றப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 18 வயதிற்கு கீழ் உள்ளோரின் பெயருடன் மட்டுமே தந்தை அல்லது கணவரின் பெயர் இடம் பெறும். 18 மேற்பட்டவர்களின் கார்டுகளில் இனி தந்தை, கணவர் பெயர் இருக்காது. பிறந்த தேதி, மாதம் இருக்காது. ஆண்டு மட்டுமே குறிப்பிடப்படும். அனைத்து அடிப்படை பதிவுகளும் தனித்துவ அடையாள ஆணைய தரவில் ரகசியம் காக்கப்படும். என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது, என்றனர்.