/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெருக்கடியில் அரசு பள்ளி மரத்தடியில் படிக்கும் அவலம் நெருக்கடியில் அரசு பள்ளி மரத்தடியில் படிக்கும் அவலம்
நெருக்கடியில் அரசு பள்ளி மரத்தடியில் படிக்கும் அவலம்
நெருக்கடியில் அரசு பள்ளி மரத்தடியில் படிக்கும் அவலம்
நெருக்கடியில் அரசு பள்ளி மரத்தடியில் படிக்கும் அவலம்
ADDED : ஜூன் 23, 2025 11:40 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தி அரசு பள்ளி மாணவர்கள் இட நெருக்கடியால் மரத்தடியிலும் தரையிலும் அமர்ந்து படிக்கும் அவலம் உள்ளது.
சிவகங்கை அருகே உள்ளது சக்கந்தி கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி 2020--21ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 6 முதல் 10ம் வகுப்பு வரை 240 மாணவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2வில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனி வகுப்பறை கிடையாது.
மேல் நிலை மாணவர்களுக்கு ஆய்வக வசதி கிடையாது. ஒவ்வொரு பாடத்திற்கும் வாரத்திற்கு இரண்டு பாட வேளை ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணினி அறிவியல் மாணவர்கள் கணினி ஆய்வகம் இல்லாமலேயே பிளஸ் 2 முடிக்கும் நிலை உள்ளது.
பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கிராம மக்கள் ஆசிரியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சக்கந்தி மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம், ஆய்வக வசதி ஏற்படுத்திதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.