/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு: ஒரே வளையத்திற்குள் சுற்றும் விசாரணை வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு: ஒரே வளையத்திற்குள் சுற்றும் விசாரணை
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு: ஒரே வளையத்திற்குள் சுற்றும் விசாரணை
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு: ஒரே வளையத்திற்குள் சுற்றும் விசாரணை
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு: ஒரே வளையத்திற்குள் சுற்றும் விசாரணை
ADDED : செப் 09, 2025 04:09 AM
சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை வீசி சென்ற வர்கள் குறித்து விசாரிக்கும் போலீசார் சர்வேயர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கலெக்டர் பொற்கொடி யிடம் முறையிட்டனர்.
திருப்புவனம் தாலுகாவில் ஆக., 22 முதல் 26 வரை நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ள 'சர்வே பிரிவில்' வைத்திருந்தனர்.
அங்கிருந்த மனுக்களை யாரோ ஆக., 29 காலை 9:45 மணிக்கு எடுத்து சென்று வைகை ஆற்றிற்குள் வீசி சென்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு அரசு உத் தரவிட்டது.
சிவகங்கை ஆர்.டி.ஓ., விஜயகுமார் விசாரணை செய்து, கலெக்டரிடம் அறிக்கை அளித்தார். தாசில்தார் உட்பட சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். தாசில்தார் விஜயகுமாரை, சிவகங்கை வட்ட வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்தனர். மேலும் சர்வே பிரிவு வரைவாளர்கள் சிலருக்கு (17 பி) நோட்டீஸ் வழங்கினர்.
திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையை தாலுகா அலுவலகத்தில் துவக்கிய போதே, அங்கு 'சி.சி.டி.வி.,' கேமரா இல்லாததால், போலீசார் விசாரிப்பதில் தொய்வு துவங்கியது. தொடர்ந்து தாலுகா அலு வலகத்தில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் வழித் தடங்களில் உள்ள ஓட்டல், டீக்கடைகளில் உள்ள 'சி.சி.டி.வி.,' கேமராக்களை ஆய்வு செய்தும், போலீ சாருக்கு எந்தவித தட யமும் கிடைக்கவில்லை.
மாவட்ட அளவில் பணிபுரியும் அனைத்து சர்வேயர், வரைவாளர்களும் நேற்று கலெக்டர் பொற்கொடியை சந்தித்து, போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே சர்வே பிரிவில் உள்ள வர்கள் மீது ஒழுங்கு நட வ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை வீசியவர்கள் யார் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.