/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விவசாயிகளுக்கு மானியத்தில் 'சிவன் சம்பா' நெல் விதை விவசாயிகளுக்கு மானியத்தில் 'சிவன் சம்பா' நெல் விதை
விவசாயிகளுக்கு மானியத்தில் 'சிவன் சம்பா' நெல் விதை
விவசாயிகளுக்கு மானியத்தில் 'சிவன் சம்பா' நெல் விதை
விவசாயிகளுக்கு மானியத்தில் 'சிவன் சம்பா' நெல் விதை
ADDED : செப் 09, 2025 04:09 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு 'சிவன் சம்பா' நெல் விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
முதல்வரின் மண்ணுயிர் காத்து, மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் ஜெயராமன் பாரம்பரிய நெல் விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கிச்சலி சம்பா 2000, துாயமல்லி 5000, 'சிவன் சம்பா' நெல் விதை 5000 கிலோ வரை மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நெல் விதைகள் தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.வேளாண்மை அலுவலரை அணுகி பயன் பெறலாம்.
சம்பா பருவத்திற்கு நெல் இருப்பு மாவட்டத்தில் அக்., மாதத்தில் சம்பா பருவத்திற்கான நெல் நடவு பணி துவங்கும்.இந்த ஆண்டு நெல் விதை 600 டன் வரை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இது வரை 182 டன் விதைகள் விவசாயி களுக்கு வழங்கியுள்ளனர்.
தற்போது கோ- 51,ஆர்.என்.ஆர்., ஜே.சி.எல்., பி.பி.டி., என்.எல்.ஆர்.டி., டி.கே.எம்., 13 கோ 52 ரக நெல் விதைகள் 450 டன் வரை இருப்பு உள்ளது. தேசிய விதை கழகத்தில் இருந்து 25 டன் ஆர்.என்.ஆர்.,விதை பெற்று, இருப்பில் உள்ளது.
இந்த ஆண்டு புதிய ரகங்களான கோ 52, அம்பை 21, டி.கே.எம்.,15 ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க ஆதார விதை பெறப்பட்டுள்ளது. மேலும் உளுந்து 18 டன், சிறுதானியங்களில் ராகி 580 கிலோ, குதிரைவாலி 880கிலோ இருப்பு உள்ளது.
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கேட்டு பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.