/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு 40 ஆண்டு காலத்திற்கு பின் நிறைவேற்றம் திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு 40 ஆண்டு காலத்திற்கு பின் நிறைவேற்றம்
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு 40 ஆண்டு காலத்திற்கு பின் நிறைவேற்றம்
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு 40 ஆண்டு காலத்திற்கு பின் நிறைவேற்றம்
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு 40 ஆண்டு காலத்திற்கு பின் நிறைவேற்றம்
ADDED : செப் 23, 2025 04:17 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் துவங்கி 40 ஆண்டுகளுக்கு பின் கட்டப் பட்டுள்ள புதிய நிலைய கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.
திருப்புத்துாரில் 1986-ல் தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டது. தற்காலிகமாக, பேரூராட்சி குடிநீர் திட்ட மேல்நிலைத்தொட்டி பம்ப் ஆப்பரேட்டர் அறையில் செயல் படத் துவங்கியது.
புதிய நிலைய கட்டடத்திற்காக பல முறை நிதி ஒதுக்கியும் இடம் தேர் வாகாமல் புதிய கட்டடம் கட்ட முடியவில்லை. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ. 2.17 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட நிதி அனுமதியானது.
திருப்புத்துார் புதுக்காட்டம்பூர் பகுதியில் நேற்று முதல்வரால் காணொளியில் திறந்து வைக்கப்பட்டது. தென்மண்டல துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.
கலெக்டர் பொற்கொடி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி அலுவலகப் பணிகளை துவக்கி வைத்தனர்.