/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 'இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது' 'இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது'
'இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது'
'இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது'
'இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது'
ADDED : மார் 23, 2025 01:54 AM

காரைக்குடி: ''தி.மு.க., அரசு இல்லாத பிரச்னைகள் இருப்பதாக கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது,'' என, காரைக்குடியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
தி.மு.க., அரசை கண்டித்து காரைக்குடி அருகே அழகாபுரியில் உள்ள தன் வீட்டில் எச்.ராஜா கருப்பு கொடி ஏற்றினார். இதில் மாவட்ட தலைவர் பாண்டித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். பின் எச்.ராஜா கூறியதாவது: தொகுதி வரையறை குறித்து பிரதமர் மோடி பேசவில்லை. தேர்தல் ஆணையமும் பேசவில்லை.
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு பேசவில்லை. பின்பு எதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எதற்கு கூட்டம். இவர்கள் செய்த ஊழலை மறைப்பதற்காக மொழி பிரச்னையை தொடர்ந்து, தொகுதி வரையறை செய்யும் பிரச்னையை கிளப்புகின்றனர். தமிழக அரசிற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மகளிர் அனைவரும் சேர்ந்து கருப்பு கொடி காட்டும் போராட்டமும் நடந்தது என்றார்.