/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தமிழகத்தில் கூலிப்படை கொலை அதிகரிப்பு கார்த்தி எம்.பி., காட்டம் தமிழகத்தில் கூலிப்படை கொலை அதிகரிப்பு கார்த்தி எம்.பி., காட்டம்
தமிழகத்தில் கூலிப்படை கொலை அதிகரிப்பு கார்த்தி எம்.பி., காட்டம்
தமிழகத்தில் கூலிப்படை கொலை அதிகரிப்பு கார்த்தி எம்.பி., காட்டம்
தமிழகத்தில் கூலிப்படை கொலை அதிகரிப்பு கார்த்தி எம்.பி., காட்டம்
ADDED : மார் 23, 2025 01:54 AM
சிவகங்கை: தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளது, தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் 543 தொகுதியை சீரமைத்தால் தமிழகத்திற்கும் வட இந்தியாவில் பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை 888 ஆக உயர்த்தினாலும், தமிழகத்தை விட வட மாநிலங்களுக்கு அதிக உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இதனால் பாதிக்கப்படும் மாநிலங்களிடம் ஒரு கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த தமிழக முதல்வர் ஈடுபட்டுள்ளதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளது. காரைக்குடியில் பிரதான சாலையில் ஊருக்கு நடுவில் நடந்த கொலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி சம்பவங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. முதல்வரும் காவல்துறையின் தலைவரும் இவற்றை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் யார் போராட்டம் செய்தாலும் அதற்கு அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தலின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் போராடுவதற்கு அனுமதிக்க வேண்டும். முன்கூட்டியே கைது செய்யக்கூடாது. பா.ஜ., அ.தி.மு.க.,வும் இணக்கமாக போய் விபத்தாக போகிறதா அல்லது சுமுகமாக பயணிக்க போகிறார்களா என்று தெரியவில்லை என்றார்.