ADDED : ஜன 05, 2024 04:38 AM
சிவகங்கை ; ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோட்டை போஸ்ட் செங்கப்படை பகுதியை சேர்ந்தவர் 15 வயது அரசு பள்ளி மாணவி. இவர் முதுகுளத்துார் அருகே பேரையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
இவர் நேற்று காலை பள்ளி செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றபோது ஒரு மாணவர் அந்த மாணவியை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி அருகில் உள்ள கழிவறைக்கு சென்று சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.