பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்
பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்
பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்
ADDED : ஜூன் 02, 2025 10:37 PM
சிவகங்கை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மலர் துாவி வரவேற்றனர்.
2024--25ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று விடுமுறை முடிந்த பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். அவர்களுக்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் உற்சாக வரவேற்பு ஆசிரியர்களால் கொடுக்கப்பட்டது.
முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.