/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சொந்த செலவில் கால்வாய் கட்டும் வியாபாரிகள் சொந்த செலவில் கால்வாய் கட்டும் வியாபாரிகள்
சொந்த செலவில் கால்வாய் கட்டும் வியாபாரிகள்
சொந்த செலவில் கால்வாய் கட்டும் வியாபாரிகள்
சொந்த செலவில் கால்வாய் கட்டும் வியாபாரிகள்
ADDED : ஜூன் 02, 2025 10:37 PM

சிவகங்கை: சிவகங்கையில் மழை, கழிவு நீர் செல்லும் கால்வாயை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் மழைக்காலங்களில் கடை முன் கழிவு நீர் தேங்கி வியாபாரம் பாதிப்பதாக புலம்புகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1000க்கும் மேற் பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
குறிப்பாக நகரில் காந்தி வீதி, நேரு பஜார், அரண்மனை வாசல், தொண்டி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி, மஜித்ரோடு பகுதியில் கடைகள் அதிகம் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் மழைநீர் செல்ல வசதியாக முறையாக துார்வாரப்படவில்லை. கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிய மழை பெய்தாலே அரண்மனை வாசல், காந்தி வீதி, பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் கழிவு நீருடன் மழைநீரும் தேங்கி நிற்கிறது. நடந்து செல்பவர்கள், வணிக நிறுவனத்தினர் அவதிப்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் காந்திவீதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் துார்வாரப்பட்டது. அந்த கால்வாயை நகராட்சியினர் முறையாக மீண்டும் கட்டி கொடுக்கவில்லை. துார்வாரப்பட்ட கழிவுகளை அப்படியே கடை முன் விட்டு சென்றனர்.
வணிகர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பின் அகற்றப்பட்டது. பெயர்த்து எடுத்த கால்வாயை மீண்டும் அமைத்து கொடுக்காததால்வணிகர்கள் தங்களது கடை முன்புறம் உள்ள பகுதியை சீரமைத்து கொண்டனர்.
அரண்மனை வாசல் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள கடைகள் முன்பு செல்லும் கால்வாயையும் நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இந்த கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பி காணப்படுகிறது.
இந்த கால்வாயின் மேற்பகுதியில் வணிக நிறுவனங்கள் அவர்களதுசொந்த செலவில் நடைபாதை அமைத்து கொள்கின்றனர்.மழைபெய்தால் இந்த பகுதி முழுவதும்கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து தேங்குவதால் வியாபாரம் பாதிக்கிறது.
ஒவ்வொரு மழை காலத்திலும் இது போன்று பிரச்னை வருவதால் வியாபாரிகளே அவர்களது சொந்த செலவில் நிரந்தரமாக பாதிப்பு வராத வகையில் கால்வாய் கட்டும் பணியை மேற்கொள்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் நகரில் முறையாக அனைத்து பகுதியிலும் சாக்கடை கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.