நீட் ரிசல்ட் அச்சம் மாணவர் தற்கொலை
நீட் ரிசல்ட் அச்சம் மாணவர் தற்கொலை
நீட் ரிசல்ட் அச்சம் மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 16, 2025 05:29 AM
காரியாபட்டி,: சிவகங்கை மாவட்டம் செம்பனுாரைச் சேர்ந்த புகழீஸ்வரன் மகன் ராகுல் தர்ஷன் 17. இவர் காரியாபட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி நீட் படித்து தேர்வு எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெற முடியுமோ முடியாதோ என்ற அச்சத்தில் இருந்தார். அவ்வப்போது நண்பர்கள், உறவினர்களிடம் பேசும்போதும், விளையாடும்போதும் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. முடிவுகள் வெளியாவதற்கு முன் உடன் பிறந்த அண்ணனுக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.