ADDED : பிப் 12, 2024 04:53 AM
காரைக்குடி: காரைக்குடி சகாய மாதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மாநில தடகளப் போட்டியில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிங்ஸ் இன்ஜி., கல்லூரி மற்றும் குயின்ஸ் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், 8 வயதுக்கு உட்பட்டோருக்கான 60 மீட்டர், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் மற்றும் 200மீ தடகள போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை மாணவர்கள் பெற்றனர். உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் கிரண் பாராட்டினார்.