/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை நகராட்சியில் பணிகள் தேக்கம்; கவுன்சிலர்கள் புகார்சிவகங்கை நகராட்சியில் பணிகள் தேக்கம்; கவுன்சிலர்கள் புகார்
சிவகங்கை நகராட்சியில் பணிகள் தேக்கம்; கவுன்சிலர்கள் புகார்
சிவகங்கை நகராட்சியில் பணிகள் தேக்கம்; கவுன்சிலர்கள் புகார்
சிவகங்கை நகராட்சியில் பணிகள் தேக்கம்; கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜன 30, 2024 11:43 PM
சிவகங்கை, : சிவகங்கை நகராட்சியில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில்வரி, காலி மனையிட வரி உள்ளிட்டவை ரூ.7 கோடி வரை பாக்கியுள்ளது. ஜன.12 அன்று புதிய கமிஷனராக செந்தில்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
நகராட்சியில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியில் பொறுப்பேற்றதால் இவர் பயன்படுத்தக்கூடிய வாகனத்திற்கு கூட டீசல் நிரப்ப முடியவில்லை. நகராட்சியில் ஏற்கனவே முடிவடைந்த ஒப்பந்த பணிகளுக்கும் நிலுவைத் தொகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் நகராட்சி வார்டுகளில் ஆங்காங்கே குப்பை ரோட்டோரங்களில் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை.
தமிழ்செல்வி 13 வார்டு கவுன்சிலர் கூறுகையில், வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை பணியும் நடைபெறவில்லை. குடி தண்ணீர் கூட பத்து நாட்களுக்கு ஒரு தடவை தான் வருகிறது.
போதிய தெருவிளக்குகள் எரிவதில்லை. புதிய வீடுகள் கட்ட பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்து பல மாதமாக கையெழுத்தாகாமல் உள்ளது. தெருக்கள் முழுவதும் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
7 வார்டு கவுன்சிலர் காந்தி கூறுகையில், எங்கள் வார்டில் 3 தொட்டி பழுதாகி உள்ளது. சரி செய்ய நகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கமிஷனர் செந்தில் குமார் கூறுகையில், நகராட்சியில் வரிவசூல் நடைபெற்று வருகிறது. ஏரியாவை தெரிந்து கொள்ள நடந்தும் டூவீலரிலும் செல்கிறேன் என்றார்.