ADDED : பிப் 25, 2024 06:34 AM
மானாமதுரை : மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலை பள்ளி,எம்.கரிசல்குளம் குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா தாளாளர் பூமிநாதன் தலைமையில் நடந்தது.
முதல்வர் சுபாஷினி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பல்சுவை போட்டிகள் நடைபெற்றன.