/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டையில் மாசி மகம் ரத்தினவேலிற்கு சிறப்பு பூஜைதேவகோட்டையில் மாசி மகம் ரத்தினவேலிற்கு சிறப்பு பூஜை
தேவகோட்டையில் மாசி மகம் ரத்தினவேலிற்கு சிறப்பு பூஜை
தேவகோட்டையில் மாசி மகம் ரத்தினவேலிற்கு சிறப்பு பூஜை
தேவகோட்டையில் மாசி மகம் ரத்தினவேலிற்கு சிறப்பு பூஜை
ADDED : பிப் 25, 2024 06:25 AM
தேவகோட்டை, : தேவகோட்டையில் மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியில் இருந்து நேற்று அதிகாலை 5:00 மணியளவில் வைர கற்களுடன் கூடிய ரத்தினவேல் தேவகோட்டை கொண்டு வரப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைத்து வேலிற்கு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் ரத்தின வேல் நகர பள்ளிக்கூடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழியில் பக்தர்கள் வேலிற்கு பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து ரத்தின வேல் நகரப்பள்ளிக்கூடத்தில் உள்ள முருகப்பெருமான் கைகளில் அணிவிக்கபட்டது.
வேலை வெளியே எடுத்தால் அன்னதானம் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஐதீகப்படி 10 மூடை அரிசியில் சாதம் தயார் செய்து வேலிற்கு சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தன.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. தொடர் தீபாராதனை பூஜைகளுக்குப் பின் ரத்தின வேல் பலத்த பாதுகாப்புடன் குன்றக்குடி கொண்டு செல்லப்பட்டது.