ADDED : ஜூன் 14, 2025 11:38 PM
சிவகங்கை : சிவகங்கையில் ஜூன் 24 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, திருநங்கைகளுக்கு ஒரே நாளில் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவி கிடைக்க சமூக நலத்துறை, இதர நலத்திட்ட சேவை வழங்கும் துறை சார்பில் ஜூன் 24 அன்று சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடைபெறும்.
இம்முகாமில் திருநங்கைகள், திருநங்கையர் அடையாள அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை, முதல்வரின் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை பெற உரிய சான்று ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரத்திற்கு 04575 -- 240 426 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.