/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடி விடுவிப்பு அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடி விடுவிப்பு
அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடி விடுவிப்பு
அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடி விடுவிப்பு
அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடி விடுவிப்பு
ADDED : ஜூன் 14, 2025 11:37 PM
சிவகங்கை : ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட நிதியின் முதற்கட்ட மானிய தொகை ரூ.14 கோடியை சிவகங்கைக்கு மாநில அரசு விடுவித்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை தடையின்றி பயன்படுத்தும் விதமாக புதிய மின் சாதனங்கள், பழுது பார்த்தல், ஆசிரியர்களுக்கான 'டேப்லெட்' க்குரிய சிம்கார்டு தொகை வழங்குதல், பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு மாநில அளவில் மானியத்தொகை ரூ.58.86 கோடியை மாநில அரசு விடுவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஒன்று முதல் 30 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், 31 முதல் 100 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.25,000, 101 முதல் 250 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், 251 முதல் 1,000 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், 1000 மாணவருக்கு மேல் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சம் வீதம் மானியத் தொகை என மாவட்ட அளவில் 978 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.99 லட்சத்து 45 ஆயிரம், அரசு உயர், மேல்நிலை பள்ளிகள் 138 க்கு ரூ.40 லட்சத்து 62 ஆயிரத்து 500 என 1,116 அரசு பள்ளிகளுக்கு ரூ.14 கோடியே 7 ஆயிரத்து 500யை சிவகங்கை மாவட்டத்திற்கு மாநில அரசு விடுவித்துள்ளது.
இந்த நிதியில் மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவு நீர் தொட்டி பழுதுபார்த்தல், குடிநீர் வசதிக்கான தொட்டி, குழாய் பழுது பார்த்தல், சுகாதாரமான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.