/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரூ.10 தட்டுப்பாடு; சில்லரை வியாபாரிகள் தவிப்பு ரூ.10 தட்டுப்பாடு; சில்லரை வியாபாரிகள் தவிப்பு
ரூ.10 தட்டுப்பாடு; சில்லரை வியாபாரிகள் தவிப்பு
ரூ.10 தட்டுப்பாடு; சில்லரை வியாபாரிகள் தவிப்பு
ரூ.10 தட்டுப்பாடு; சில்லரை வியாபாரிகள் தவிப்பு
ADDED : மே 28, 2025 07:28 AM
சிவகங்கை : வர்த்தக நிறுவனங்களில் ரூ.10க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில்லரை வழங்க முடியாமல் வியாபாரிகள் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் முக்கிய வர்த்தக நகரங்களாக சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, காளையார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகள் விளங்கி வருகின்றன. இங்கு டீ, பலசரக்கு, ஓட்டல் உட்பட ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை சில்லரை விலையில் வாங்கி பயன் பெறுகின்றனர்.
இன்றைய சூழலில் சிறுவணிகர்கள் சில்லரை வியாபாரம் செய்வதற்காக, அந்தந்த பகுதி பணம் வழங்கும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று, சில்லரை நாணயம், ரூ.10, 20 நோட்டுக்களை வாங்கி வந்து வியாபாரத்திற்காக பயன்படுத்துவார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக வியாபாரிகளுக்கு வினியோகம் செய்ய வங்கிகளில் ரூ.10 நோட்டுக்கள் இல்லை என தெரிவித்து விடுகின்றனர்.
இதனால், சில்லரை வர்த்தகத்தில் பொருட்களை வாங்குவோருக்கு உரிய சில்லரை தொகை வழங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள நகர் பகுதியில் உள்ள வங்கிகளில், ரூ.10 நோட்டுக்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.10 நோட்டுக்கள் வங்கிகளுக்கு வருவதே இல்லை. இதனால் வர்த்தகர்கள் கேட்டால் சில்லரை நாணயத்தை தான் தருகிறோம். இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்களில் ரூ.10 நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவ வாய்ப்புண்டு, என்றனர்.