திருப்புத்துாரில் சனி மகா பிரதோஷம்
திருப்புத்துாரில் சனி மகா பிரதோஷம்
திருப்புத்துாரில் சனி மகா பிரதோஷம்
ADDED : மே 11, 2025 06:23 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி-,அம்பாள் பிரகார வலம் வந்தனர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்திதேவருக்கு முன் யாகசாலை பூஜை ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் நடத்தினர்.
யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி,அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தன. பின்னர் உற்ஸவ சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி கோயில் பிரகாரங்களில் பக்தர்களுடன் வலம் வந்தார். சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் ஆதி சங்கரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில், திருக்கயிலேஸ்வரர் கோயில், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், ஆலமரத்து முனீஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.