/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறுத்தம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறுத்தம்
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறுத்தம்
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறுத்தம்
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறுத்தம்
ADDED : மே 11, 2025 06:23 AM
திருப்புவனம் : மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில் பலரும் ரோட்டை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டியிருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
2010ல் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வருவாய்த்துறை மூலம் உரிய இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டது. திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் சர்வீஸ்ரோடு, பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு 2017 முதல் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
வாகனப் போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்ததை தொடர்ந்து சாலையின் அகலத்தை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் இருந்து தட்டான்குளம் வரை பணிகள் தொடங்கின.
சாலையை அகலப்படுத்தும்போது ஏற்கனவே நிலத்திற்கு பணம் பெற்ற சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். தற்போது சாலைப்பணிக்கு இடம் தேவைப்படும் நிலையில் கட்டடத்தை அகற்ற மறுப்பதுடன் ஒப்பந்தகாரர்களுடன் தகராறு செய்கின்றனர்.
மேலும் புதியதாக நிலம் வாங்கியவர்கள் இடத்தை காலி செய்ய மறுப்பதால் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொருவரும் மூன்று அடி முதல் பத்து அடி வரை நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பியுள்ளனர். நான்கு வழிச்சாலையின் இருபுறமும் மழை நீர் சேமிப்பு கால்வாய் உள்ளிட்டவை அமைக்க வேண்டும்.
எனவே கட்டட உரிமையாளர்களிடம் வருவாய்த்துறை பேச்சுவார்த்தை நடத்தி கட்டடங்களை அகற்றி பணிகளை விரைவு படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி அடுத்தடுத்து பல கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும் மதுரையில் இருந்து பரமக்குடி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.