/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தெப்பக்குளத்தில் கலக்கும் கழிவு நீர் சுகாதாரகேடு அச்சம்தெப்பக்குளத்தில் கலக்கும் கழிவு நீர் சுகாதாரகேடு அச்சம்
தெப்பக்குளத்தில் கலக்கும் கழிவு நீர் சுகாதாரகேடு அச்சம்
தெப்பக்குளத்தில் கலக்கும் கழிவு நீர் சுகாதாரகேடு அச்சம்
தெப்பக்குளத்தில் கலக்கும் கழிவு நீர் சுகாதாரகேடு அச்சம்
ADDED : ஜன 01, 2024 05:27 AM

சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சிவகங்கை நகர் தெப்பக் குளம். இந்த தெப்பக்குளம் சிவகங்கையை ஆண்ட மன்னர் வாரிசுகளால் கட்டப்பட்டது. பின்னர் இந்த தெப்பக்குளம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெப்பக்குளம் கட்டும் போது வரத்து கால்வாய்கள் அமைத்து நகரில் பெய்யும் மழை நீரால் இயற்கையாகவே நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்த வாரத்து கால்வாய்கள் அனைத்தும் முறையாக துார்வாராமல் அடைபட்டுள்ளது. தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் முள் செடிகள் முளைத்து துார்வாராமல் உள்ளது.
மேலும் இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கழிவு நீர்கள் வரத்து கால்வாய் மூலம் தெப்பக்குளத்தில் கலக்கிறது.
நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.