/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடுகாரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடு
காரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடு
காரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடு
காரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடு
ADDED : ஜன 28, 2024 06:08 AM

திருப்புத்துார், ; திருப்புத்துார் அருகே மேலுார்- காரைக்குடி 4 வழிச்சாலையில் கூடுதலாக சேவை ரோடு அமைக்க மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
திருப்புத்துார் வழியாக மேலுார் - காரைக்குடி ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. 90 சதவீதம் தார் ரோடு பணி முடிந்து விட்டன.
தற்போது பாலம், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது அதில் கூடுதலாக சில வசதிகளை சேர்த்துள்ளனர்.
நான்குவழிச் சாலையில் குறுக்கிடும் தென்கரை ரோடு, கண்டரமாணிக்கம் ரோடுகளில் தற்போது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தற்போது சர்வீஸ் ரோடு அமைக்க தென்கரை ரோட்டில் பாலத்தின் அருகில் உள்ள மரங்கள் அகற்றப்படுகிறது.
இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைப்பதன் மூலம் நான்கு வழிச்சாலையிலிருந்து நெடுஞ்சாலைத்துறை ரோட்டிற்கு வரவும், நெடுஞ்சாலை ரோட்டிலிருந்து 4 வழிச் சாலைக்கு செல்லவும் வாகன ஓட்டுனர்களுக்கு எளிதாக இருக்கும்.