ADDED : ஜன 13, 2024 05:17 AM
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் சர்வதேச இஸ்லாமிய ஆராய்ச்சி மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை வகித்தார். சென்னை ஐ.ஐ.டி.ஆராய்ச்சியாளர் ஜாஸ்மின் இஸ்லாமிய ஆராய்ச்சி மேலாண்மை குறித்து பேசினார்.
சமூக ஆர்வலர் ஹிதாயத்துல்லாஹ் சமூக முன்னேற்றத்தில் ஆராய்ச்சியாளர்களின் பங்கு மற்றும் தேவை குறித்து பேசினார். சென்னை ஜாமியா இல்மியா இஸ்லாமிய அறிவியல் மையம் அரபிக் ஆராய்ச்சி கல்லுாரி நிறுவனரும் இஸ்லாமிய வரலாற்று ஆராய்ச்சி யாளருமான கலீல் அஹமது முனீரி நவீன அறிவியல் முன்னேற்றத்தில் இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களின் பங்கு குறித்து பேசினார்.பொருளியல் துறைத்தலைவர் ஜஹாங்கிர் நன்றி கூறினார்.