ADDED : பிப் 24, 2024 04:42 AM
காரைக்குடி: செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
இதில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் எ. யுவன்ராஜ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கமும், கே.ராஜ்குமார் 800 மீட்டரில் தங்கப்பதக்கமும் எம். கோடீஸ்வரன் ஆயிரம் மீட்டரில் தங்க பதக்கம் பெற்றனர்.
பிற போட்டிகளில், சி.தனுஷ்குமார் யு. சிவராமன், எம். ராஜ்குமார் உள்ளிட்ட மாணவர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றனர்.
இதன் மூலம் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களை கல்லூரி நிர்வாகம், முதல்வர் பழனிச்சாமி உடற்கல்வி இயக்குனர் வீரமணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.