ADDED : செப் 02, 2025 03:35 AM
காரைக்குடி : காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவிகள் தேசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
சென்னையில் 17-வது ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில், ஸ்ரீ ராஜராஜன் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவி ஜனனி வெற்றி பெற்றார். ஹைதராபாத்தில் செப்.26 முதல் 28 வரை நடைபெற உள்ள 17வது தேசிய ஹேண்ட் பால் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
மாணவியை ஸ்ரீ ராஜராஜன் கல்வி குழுமத் தலைவர் சுப்பையா, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.