/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் யூனியன் தலைவர் வெற்றி செல்லும்: கோர்ட் உத்தரவு முன்னாள் யூனியன் தலைவர் வெற்றி செல்லும்: கோர்ட் உத்தரவு
முன்னாள் யூனியன் தலைவர் வெற்றி செல்லும்: கோர்ட் உத்தரவு
முன்னாள் யூனியன் தலைவர் வெற்றி செல்லும்: கோர்ட் உத்தரவு
முன்னாள் யூனியன் தலைவர் வெற்றி செல்லும்: கோர்ட் உத்தரவு
ADDED : செப் 02, 2025 03:35 AM
தேவகோட்டை : தேவகோட்டை அருகே சித்தானுாரைச் சேர்ந்தவர் சரவண மெய்யப்பன். 2019ல் உள்ளாட்சித் தேர்தலில் கண்ணங்குடி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஒன்றிய தலைவராகவும் தேர்வு பெற்றார்.
சரவண மெய்யப்பன் கான்ட்ராக்டராக இருப்பதால் போட்டியிட தகுதி இல்லை. எனவே வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்த்து போட்டியிட்ட சந்தியாகு ( காங்.), வீரக்குமாரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . மனுவை விசாரித்த நீதிபதிகள்
விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி சிவகங்கை கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர், சரவணன் மெய்யப்பன் போட்டியிடுவதற்கு தகுதியான நபர் என கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டும் எனவும், இல்லையெனில் தகுதி நீக்கம் செய்யப் படுவீர்கள் என சரவண மெய்யப்பனுக்கு குறிப்பாணை அனுப்பினார்.
தேவகோட்டை முன்சீப் கோர்ட்டில் சரவண மெய்யப்பன் சார்பில் வக்கீல் ராம்ஜி மனு தாக்கல் செய்தார்.
தேர்தலின் போது சரவண மெய்யப்பன் கான்ட்ராக்டர் என சான்றுகள் இல்லை வாதிட்டார்.
மேலும் விசாரித்த நீதிபதி பிரேமி ஒன்றிய தேர்தலில் சரவண மெய்யப்பன் போட்டியிட தகுதியானவர் நபர் என்றும், வெற்றி பெற்றது செல்லும் எனவும் தீர்ப்பளித்தார்.