/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வாள் சண்டைபோட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வுவாள் சண்டைபோட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
வாள் சண்டைபோட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
வாள் சண்டைபோட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
வாள் சண்டைபோட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
ADDED : பிப் 05, 2024 11:53 PM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வாள் சண்டையில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட வாள் சண்டை போட்டியில் இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவன் ஆ.சைலஸ் ராபின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜன.28 ல் பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். தேசிய அளவிலான போட்டிக்கு சைலஸ் ராபின் தேர்வு செய்யப்பட்டார். மாணவனை தாளாளர் நா.ராமேஸ்வரன், முதல்வர் கே.ஆர். அமுதா, துணை முதல்வர் ஞா. அருள் சேவியர் அந்தோணி ராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.