ADDED : மார் 17, 2025 06:38 AM
திருப்புவனம், : திருப்புவனம் அருகே கீழராங்கியன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் லதா தேவி தலைமையில் நடந்தது. வட்டார வளமைய கண்காணிப்பாளர் ராஜா, ஆசிரியர் சந்தன மகராஜன் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை பாரதி வரவேற்றார். ராமமூர்த்தி ராய் சிறப்பு வகித்தார். தலைமை ஆசிரியை லதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை அனுசியா தேவி நன்றி கூறினார். ஆசிரியை சுபா, கவியரசி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.