ADDED : பிப் 11, 2024 12:27 AM

சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் சேகர் வரவேற்றார். திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயப்பிரதா, கோட்டாட்சியர் சுகிதா முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்ற பேச்சாளர் கண்ணதாசன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் வாழ்த்தினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.