Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்

ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்

ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்

ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்

ADDED : பிப் 24, 2024 04:08 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் நடந்தது.

குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் மாசிமகத் திருவிழா பிப். 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி காலை 9:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். மதியம் 3:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர்களில் முன்னே செல்ல, பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்கள் சென்றது.

வழி நெடுகிலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us