/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆமை வேகத்தில் நடக்கும் சாலை திட்டங்களால் பாதிப்பு; திருப்புத்துார் கிராமங்களில் போக்குவரத்து கடும் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை திட்டங்களால் பாதிப்பு; திருப்புத்துார் கிராமங்களில் போக்குவரத்து கடும்
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை திட்டங்களால் பாதிப்பு; திருப்புத்துார் கிராமங்களில் போக்குவரத்து கடும்
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை திட்டங்களால் பாதிப்பு; திருப்புத்துார் கிராமங்களில் போக்குவரத்து கடும்
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை திட்டங்களால் பாதிப்பு; திருப்புத்துார் கிராமங்களில் போக்குவரத்து கடும்
ADDED : மே 28, 2025 07:35 AM

இத்திட்டத்தின் கீழ் கே.வைரவன்பட்டி,- கண்டவராயன்பட்டி, காவனுார்,-புதுவளவு,-காரையூர் இணைப்பு ரோடு, நாகப்பன்பட்டி,-இரணியூர், அயினிப்பட்டி- தெற்கு இளையாத்தங்குடி என்று பல கிராமங்களில் இணைப்புச்சாலைப் பணிகள் கடந்த ஆண்டில் துவங்கின. புதுவளவு ரோட்டில் மண் அணைத்து,ஜல்லிக்கற்கள் பரப்பி 10 மாதங்களாகியும் பணிகள் முழுமையடையவில்லை.
புதுவளவு போஸ் கூறுகையில், ரோடு அமைக்க துவங்கியதும் காலையில் வந்து செல்லும் டவுன் பஸ் வருவதில்லை. பள்ளிகள் திறக்கப்பட உள்ளன இந்த ரோடு முழுமையடைந்தால் தான் பஸ் போக்குவரத்து துவங்கும். இரவு நேரங்களில் விபத்தின்றி மற்ற வாகனப்போக்குவரத்தும் நடைபெறும்' என்றார்.
இதே போன்று இளையாத்தங்குடி பகுதியில் ரோடு போட 2 கி.மீ.தூரத்திற்கு ஜல்லிக்கற்கள் பரப்பி 6 மாதங்களாகியும் அடுத்த கட்டப்பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் இப்பகுதி மக்களும் வாகனப்போக்குவரத்திற்கு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வடக்கு இளையாத்தங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா கூறுகையில், ஊராட்சி அலுவலகம் முதல் ஊரணி வரை ரோடு போடப்படவில்லை. சிறுவர்கள் அடிக்கடி டூ வீலரில் சென்று கீழே விழுந்து விடுகிறார்கள். பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. 7 மாதங்களாகியும் ஜல்லி மட்டும் போட்டு தார் ரோடு முழுமையடையவில்லை. பள்ளிக்கூடம் திறந்தால் சைக்கிளில் மாணவ,மாணவியர் செல்ல சிரமப்படுவார்கள்' என்றார்.
கீழச்சிவல்பட்டி வக்கீல் முருகேசன் கூறுகையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் ரோடு பணிகள் மீதான ஆய்வு குறைந்து விட்டது. மக்கள் பிரச்னைகள் அலுவலகங்களை சேரவில்லை.இதனால் இந்த ரோடு பணி மிகவும் மந்தமாக உள்ளது' என்றார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினர் கூறியதாவது: பணிகள் அவ்வப்போது பெய்த மழையால் தாமதமானது. ஜூன் 15க்குள் பணிகள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விரைவில் தார் ரோடு பணி முடிக்கப்படும்' என்றனர்.
பொதுவாக பிரதம மந்திரி சாலைத் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள்அடுத்து 5 ஆண்டுகளுக்குஒப்பந்ததாரரே மேற்கொள்ள வேண்டும்.ஆனால் சாலைப்பணிகள் துவங்கி முடிப்பதற்குள் பராமரிப்பு காலத்தில் ஒரு ஆண்டு கடந்து விடுகிறது. இதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட காலத்தில் இந்த சாலைப்பணிகளை துவக்கி, முடிக்க முறையான ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.