ADDED : ஜன 01, 2024 05:31 AM
தேவகோட்டை: தேவகோட்டை தொண்டியார் வீதியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை சேதமடைந்துள்ளது.
தேவகோட்டையில் காந்தி ரோடு முதல் வெள்ளையன் ஊரணி வழியாக பஸ் ஸ்டாண்டை இணைக்கும் முக்கிய ரோடாக தொண்டியார் வீதி உள்ளது.
இந்த வீதியில் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. குறுகிய ரோடாக இருப்பினும், இந்த ரோடு வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதி. இதனால், காலப்போக்கில் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
குறிப்பாக இந்த ரோடு பேவர் பிளாக் கற்கள் தரையில் பதிந்து, பள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்த ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.