/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நெல் விளைச்சல் போட்டி கொந்தகை விவசாயி முதலிடம்நெல் விளைச்சல் போட்டி கொந்தகை விவசாயி முதலிடம்
நெல் விளைச்சல் போட்டி கொந்தகை விவசாயி முதலிடம்
நெல் விளைச்சல் போட்டி கொந்தகை விவசாயி முதலிடம்
நெல் விளைச்சல் போட்டி கொந்தகை விவசாயி முதலிடம்
ADDED : ஜன 28, 2024 06:23 AM

கீழடி : சிவகங்கை மாவட்ட அளவில் நடந்த நெல் விளைச்சல் போட்டியில் கொந்தகையைச் சேர்ந்த பேராசிரியர் கதிரேசன் முதலிடம் பிடித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் நெல் விளைச்சல் போட்டி வேளாண் துறை சார்பில் நடத்தப்படும், ஒரு ஏக்கரில் அதிக விளைச்சல் காட்டும் விவசாயிகளுக்கு சான்றிதழும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
கடந்தாண்டு நடந்த நெல் விளைச்சல் போட்டியில் கீழடி அருகே கொந்தகையைச் சேர்ந்த பேராசிரியர் கதிரேசனும் பங்கேற்றார்.
கோ 51 என்ற நெல் ரகத்தை பயிரிட்ட இவர் ஒரு ஏக்கரில் அதிகபட்சமாக 3035. 160 கிலோ விளைச்சல் கண்டார்.
இவருக்கு அடுத்தபடியாக மானாமதுரை அருகே பெருமச்சேரியைச் சேர்ந்த வீரசேகரன் என்ற விவசாயி என்.எல்.ஆர்., ரக நெல்லை ஒரு ஏக்கரில் 2937.84 கிலோ விளைவித்திருந்தார்.
முதலிடம் பெற்றவருக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 2ம் இடம் பிடித்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வேளாண் துறை மூலம் வழங்கப்பட்டு குடியரசு தின விழாவில் விவசாயிகளுக்கு கலெக்டரிடம் இருந்து பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறோம், பன்றிகள் தொல்லை, நோய் தாக்குதல், தண்ணீர் தட்டுப்பாடு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றையும் மீறி விளைச்சல் காண்பித்துள்ள நிலையில் பரிசுத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்,
பரிசு தொகையை உயர்த்தினால் மேலும் பல விவசாயிகள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பாக அமையும், என்றனர்.