/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டரசன்கோட்டை -- பாகனேரி ரோட்டை புதுப்பிக்க திட்டம் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை நாட்டரசன்கோட்டை -- பாகனேரி ரோட்டை புதுப்பிக்க திட்டம் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை
நாட்டரசன்கோட்டை -- பாகனேரி ரோட்டை புதுப்பிக்க திட்டம் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை
நாட்டரசன்கோட்டை -- பாகனேரி ரோட்டை புதுப்பிக்க திட்டம் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை
நாட்டரசன்கோட்டை -- பாகனேரி ரோட்டை புதுப்பிக்க திட்டம் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை
ADDED : மே 28, 2025 07:25 AM
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை -- பாகனேரி வரை 6 கி.மீ.,துார ரோட்டை ரூ.4.26 கோடியில் புதுப்பிக்க, வனத்துறை தடையின்மை சான்று வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில் ஒன்றியம் நாட்டரசன்கோட்டை முதல் காளையார்மங்கலம், இலந்தைமங்கலம், மாங்காட்டு பட்டி வழியாக பாகனேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கு பிரதமர் கிராம சாலை திட்டத்தில் தார்ரோடு போட ரூ.4.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டால் காளையார்மங்கலம், சானாங்குளம், இலந்தைமங்கலம், மாங்காட்டுபட்டி, கோவினிபட்டி, துவரம்பட்டி வழியாக பாகனேரிக்கும், நாட்டரசன் கோட்டை, பாகனேரியில் இருந்து இந்த ரோடு வழியாக எளிதில் ஒக்கூர் சென்றுவிட முடியும்.
சானாங்குளம், இலந்தமங்கலம், மாங்காட்டுபட்டி வரை 2 கி.மீ., துாரமும், இலந்தமங்கலம் முதல் கோவினிபட்டி, துவரம்பட்டி வரை 2 கி.மீ., துாரம் என 4 கி.மீ., துார ரோடு வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. வனத்துறை அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த ரோட்டை புதுப்பிக்க முடியும். இதையடுத்து நேற்று இலந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபாவிடம், 4 கி.மீ., வனத்துறைக்கு சொந்தமான தார் ரோட்டினை புதுப்பித்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட வன அலுவலர் பிரபா கூறியதாவது: ஏற்கனவே 4 கி.மீ., துாரம் வனத்துறைக்கு சொந்தமான இடம் ரோடாக தான் உள்ளது. இதற்கு முன்அனுமதி தருவதில் சிரமம் இல்லை. அரசின் ஒப்புதலுக்கு கிராம மக்களின் கோரிக்கையை அனுப்பியுள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், இங்கு தார்ரோடு போட தடையின்மை சான்று வழங்கப்படும், என்றார்.